ரம்புக்கனையில் Dialog தொலைபேசிக் கோபுர கேபிள் திருட்டு!

SaiSai
Dec 10, 2025 - 16:04
 0  13
ரம்புக்கனையில்  Dialog தொலைபேசிக் கோபுர கேபிள் திருட்டு!

ரம்புக்கனை, யடகம, தல்ஹேன்கந்த பிரதேசத்தில் அமைந்துள்ள Dialog தொலைபேசி கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த கேபிள்களைத் திருடிய சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட 13 கிலோகிராமுக்கும் அதிகமான செப்பு கம்பிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று ரம்புக்கனைப் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ரம்புக்கனைப் பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow