வெனிசுலா ஜனாதிபதியின் நண்பர்களின் சொத்துக்களை முடக்கிய சுவிட்சர்லாந்து
வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களின் சொத்துக்களை சுவிட்சர்லாந்து அரசாங்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கியுள்ளது.
மதுரோ அமெரிக்காவினால் கைது செய்யப்பட்டு நியூயோர்க் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ள நிலையில், சுவிட்சர்லாந்து இந்த முடிவை எடுத்துள்ளது.
தற்போது வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், மதுரோ மற்றும் அவரது நெருங்கிய சகாக்கள் தங்கள் சொத்துக்களை நாட்டிற்கு வெளியே கடத்துவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான ஒரு விசாரணை அறிக்கையின்படி சுவிஸ் வங்கிகளில் வெனிசுவேலாவின் பொதுப்பணத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் சுமார் 10 பில்லியன் டொலர் பணம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?



