கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழா: இலங்கைக்கு முதல் பதக்கத்தை வென்றார் பாலித்த பண்டார

SaiSai
Jul 31, 2026 - 08:42
 0  24
கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழா: இலங்கைக்கு முதல் பதக்கத்தை வென்றார் பாலித்த பண்டார

கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழா: இலங்கைக்கு முதல் பதக்கத்தை வென்றார் பாலித்த பண்டார

கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு முதல் பதக்கம்.!!

ஸ்கொட்லாந்தில் நடைபெற்று வரும் கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில், ஆண்களுக்கான F42 வகை மாற்றுத்திறனாளிகள் தட்டெறிதல் போட்டியில் இலங்கையின் பாலித்த பண்டார வெள்ளிப் பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

அவர் தனது முதல் முயற்சியிலேயே 46.84 மீற்றர் தூரத்திற்கு தட்டை எறிந்து 992 புள்ளிகளை பெற்று வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்.

இதன் மூலம் கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதல் பதக்கத்தை வென்ற வீரர் என்ற பெருமையையும் பாலித்த பண்டார பெற்றுள்ளார்.

மேலும், பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் வென்ற வெள்ளிப் பதக்கத்தைத் தொடர்ந்து, பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் அவர் வென்ற இரண்டாவது தொடர்ச்சியான பதக்கம் இதுவாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow