ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அணிகளின் உத்தியோகபூர்வ பதிவு நேற்றைய தினம் ஆரம்பமானது.

SaiSai
Aug 21, 2026 - 12:39
Aug 21, 2026 - 12:43
 0  35
ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அணிகளின் உத்தியோகபூர்வ பதிவு நேற்றைய தினம் ஆரம்பமானது.
ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அணிகளின் உத்தியோகபூர்வ பதிவு நேற்றைய தினம் ஆரம்பமானது.

தலைநகரில் கிரிக்கெட் திருவிழா: 40 அணிகள் களமிறங்கும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி!

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்தக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான உத்தியோகபூர்வ பதிவுகள்  ஆரம்பமாகின.

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் கல்விச் சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய 40 அணிகள் பங்கேற்கும் மாபெரும் கிரிக்கெட் திருவிழா எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் திகதி கொழும்பு சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தலைநகரில் இடம்பெறவுள்ள இந்த பிரம்மாண்டமான கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான ஆரம்ப நிகழ்வாக, போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான உத்தியோகபூர்வ அனுமதி மற்றும் விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் பிரதான காரியாலயத்தில் நடைபெற்றது.

மன்றத்தின் தலைவர் ஆர். விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், போட்டியில் பங்கேற்கவுள்ள அணிகளின் தலைவர்கள் மற்றும் மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

கல்வி மற்றும் சமூக சேவையை மையமாகக் கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக செயற்பட்டு வரும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் மற்றுமொரு முக்கிய முயற்சியாக இந்த கிரிக்கெட் திருவிழா அமையவுள்ளது.

தலைநகரில் தொழில்புரியும் மலையக இளைஞர்களை ஒன்றிணைக்கும் இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கு பல அணிகள் ஏற்கனவே ஆர்வம் காட்டி வருகின்றன. அதேவேளை, விளையாட்டின் ஊடாக இளைஞர்களை ஒன்றிணைத்து, கல்வி மற்றும் சமூகப் பணிகளுக்கான பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடனும் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கல்விக்கான பயணத்தில் விளையாட்டையும் சமூகப் பொறுப்பையும் இணைக்கும் 20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்தக் கிண்ணம், தலைநகரில் நடைபெறவுள்ள மிகப்பெரும் மலையக கிரிக்கெட் நிகழ்வுகளில் ஒன்றாக அமையவுள்ளது.

ஊடகப்பிரிவு மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow