குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
குவைத், ஜூலை 18: ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, குவைத் சர்வதேச விமான நிலையத்தின் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விமான நிலையத்தின் வழமையான செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குவைத்தின் தேசிய விமான சேவை நிறுவனமான Kuwait Airways தனது பெரும்பாலான விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை நேரங்களில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
பயணிகள் தங்களது விமானங்களின் தற்போதைய நிலை மற்றும் புதிய பயண நேரங்களை விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், விமான நிலையத்திற்கு செல்லும் முன் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சூழ்நிலைக்கு ஏற்ப விமானச் சேவைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பான மேலதிக அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?



