நாளை முதல் மழை மற்றும் காற்றின் தாக்கம் அதிகரிக்கும்
???? நாளை முதல் மழை மற்றும் காற்றின் தாக்கம் அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை ????️????
தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழை மற்றும் காற்றின் நிலைமை நாளை (06) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொணராகலை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
What's Your Reaction?



