இலங்கையில் அடுத்த 24 மணித்தியால வானிலை – வளிமண்டலவியல் திணைக்கள அறிவிப்பு
இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (12) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தத் தொகுதி அடுத்த சில நாட்களில் வடக்கு நோக்கி நகரக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தாக்கம் காரணமாக நாட்டில் நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், காலி, மாத்தறை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதால், பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
???? வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவிப்பதாவது, நிலைமை தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளது.
What's Your Reaction?



