தோட்ட தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரிக்க விஷேட ஆணைக்குழு அவசியம்-சிவில் அமைப்புகள் கோரிக்கை!

SaiSai
Aug 6, 2026 - 16:22
Aug 6, 2026 - 16:23
 0  49
தோட்ட தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரிக்க விஷேட ஆணைக்குழு அவசியம்-சிவில் அமைப்புகள்  கோரிக்கை!

தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக  வரும் அண்மைக்காலமாக  இடம் பெறும் நிர்வாக அடக்குமுறைகள் தொடர்பில், ஜனாதிபதி தலைமையில் சுயாதீன ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டுமென சமூக சிற்பிகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சமூக சிற்பிகள் அமைப்பின் ஏற்பாட்டில் ஒன்றிணைந்த சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு இன்று ஹட்டனில் நடைபெற்றது.

இதன்போது, தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கு எதிரான நிர்வாக அடக்குமுறைகள் குறித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அந்தக் கடிதத்தின் மூலம், தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை சுயாதீனமாக ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், அதேவேளை தொழில் திணைக்களம் இந்த விடயத்தில் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைப்பு தெரிவித்தது.

மேலும், இந்தக் கோரிக்கைகளுக்கு பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகளின் கவனத்தை ஈர்த்து, அவற்றை வலுப்படுத்தும் நோக்கத்திலேயே இன்றைய ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக சமூக சிற்பிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow