ஹட்டன் நகரில் தங்க நகைக் கடையில் 2.85 லட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி கொள்ளை – சந்தேக நபரை தேடும் போலீஸ்

SaiSai
Jan 21, 2026 - 18:32
 0  360
ஹட்டன் நகரில் தங்க நகைக் கடையில் 2.85 லட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி கொள்ளை – சந்தேக நபரை தேடும் போலீஸ்

ஹட்டன் நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள தங்க நகைக் கடையொன்றில், வாடிக்கையாளர் போல் நடித்து வந்த நபர் ஒருவர், 2,85,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை திருடிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் இன்று (21) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் தங்கச் சங்கிலி வாங்குவதற்காக வந்தவர் போல் கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த பெண் ஊழியர்கள் காண்பித்த பல நகைகளைப் பார்வையிட்டுள்ளார். பின்னர் ஒரு சங்கிலியை ஆய்வு செய்வது போல் எடுத்துக் கொண்ட நிலையில், திடீரென அதனை எடுத்துக்கொண்டு கடையிலிருந்து தப்பியோடியுள்ளார்.

சம்பவ நேரத்தில் கடையில் இரண்டு பெண் ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். கடையின் உரிமையாளர் தனிப்பட்ட தேவைக்காக வெளியே சென்றிருந்ததை பயன்படுத்தியே இந்த திருட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொள்ளையடிக்கப்பட்ட தங்கச் சங்கிலியின் பெறுமதி சுமார் 2,85,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை சந்தேக நபரின் அடையாளம் தெரியவரவில்லை. எனவே, இந்த நபர் குறித்து ஏதேனும் தகவல் அறிந்தவர்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான விபரங்கள் தெரிந்தவர்கள், அதனை தொடர்புடைய அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow