தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியீடு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியீடு
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள், பரீட்சை நிறைவடைந்து ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி நடைபெற்ற இந்தப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, ஆகஸ்ட் 25ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் உள்ளிட்ட ஏனைய மதிப்பீட்டுச் செயற்பாடுகள் நிறைவடைந்ததும், எவ்வித தாமதமுமின்றி பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?



