யாழ்ப்பாணத்தில் விபத்து: TVK வெற்றி கொண்டாட சென்ற இருவர் உயிரிழப்பு

SaiSai
மே 5, 2026 - 19:32
 0  20
யாழ்ப்பாணத்தில் விபத்து: TVK வெற்றி கொண்டாட சென்ற இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தேர்தல் வெற்றியை கொண்டாடுவதற்காக பட்டாசு கொளுத்தச் சென்ற இரு இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (05) அதிகாலை யாழ்ப்பாணம் கோப்பாய், பருத்தித்துறை வீதி நாவற்கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் அமைந்திருந்த வீட்டின் மதிலுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சிவநேசன் குஜிந்தன் மற்றும் 24 வயதுடைய ஏழுமலை துஷாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், உயிரிழந்த இருவரும் கரவெட்டி மற்றும் நெல்லியடி பகுதிகளில் இடம்பெற்ற கடை உடைப்பு மற்றும் வீடொன்றில் வெளிநாட்டு நாணயம் திருடப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow