ஜனநாயகன் ஒன்பதில் வெளிவராது படக்குழு அறிவிப்பு!
சென்னை: இயக்குநர் அ.. வினோத் இயக்கத்தில், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், படத்துக்கு இன்னமும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. அரசியல் களத்தில் நுழையும் விஜய்யின் இறுதிப் படம் என்பதால், அவரது படத்துக்கு மீண்டும் சிக்கல்கள் உருவாகியுள்ளதாக கூறுகின்றனர்.
ஜனநாயகன்' பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த மாதம் தணிக்கைக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது. டிசம்பர் 19 அன்று படத்தை ஆய்வு செய்த தணிக்கைக் குழு, சில காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்கப் பரிந்துரைத்தது. மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகும், படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
What's Your Reaction?



