புகையிலை பயன்பாட்டால் ஆண்டுதோறும் 22,000 பேர் உயிரிழப்பு
இலங்கையில் புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாட்டினால் ஆண்டுதோறும் சுமார் 22,000 பேர் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் பதிவாகும் மொத்த மரணங்களில் 83 சதவீதம் தொற்றாத நோய்களினால் ஏற்படுகின்றன. இந்நோய்களுக்கு வழிவகுக்கும் முக்கிய நான்கு காரணிகளில் ஒன்றாக புகையிலை பயன்பாடு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் சுமார் 15 லட்சம் (1.5 மில்லியன்) பெரியவர்கள் புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் ஒவ்வொரு 6 விநாடிகளுக்கும் ஒருவர் புகையிலை பயன்பாட்டினால் உயிரிழக்கின்றார் என புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் வரிகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
What's Your Reaction?



