களனி மற்றும் களு கங்கைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு
களனி மற்றும் களு கங்கைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு – பொதுமக்களுக்கு அவதான எச்சரிக்கை
நாட்டில் நிலவும் தொடர்ச்சியான மழையால் களனி கங்கை மற்றும் களு கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், ஆற்றங்கரையோரம் மற்றும் வெள்ள அபாயம் நிலவும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நிலைமையில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனத்தில் கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
What's Your Reaction?



