உலகம் முழுவதும் 3,000 திரையரங்குகளில் நாளை வெளியாகும் விஜயின் 'ஜனநாயகன்'
உலகம் முழுவதும் 3,000 திரையரங்குகளில் நாளை வெளியாகும் விஜயின் 'ஜனநாயகன்'
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை (ஜூலை 23) உலகம் முழுவதும் சுமார் 3,000 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தப் படம் விஜயின் அரசியல் பயணத்திற்கு முன் அவர் நடித்த இறுதித் திரைப்படம் எனக் கருதப்படுவதால், இந்தியா மட்டுமன்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய இராச்சியம், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் ரசிகர்கள் சிறப்பு காட்சிகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். முன்பதிவு பல இடங்களில் சாதனை படைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பாபி டியோல், பிரகாஷ் ராஜ், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் அரசியல் பின்னணியிலான அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ளது.
தணிக்கைச் சான்றிதழ் மற்றும் வெளியீட்டு தாமதம் உள்ளிட்ட பல சவால்களைத் தாண்டி வெளியாகும் இந்தப் படம், இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் திரைப்பட வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ரசிகர்கள் பல்வேறு இடங்களில் சிறப்பு கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
What's Your Reaction?



