கனடா பொருட்களுக்கு 50% தீர்வை வரி – டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் கார், பால் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் மற்றும் மதுபான ஏற்றுமதிக்கு எதிராக கனடா பாகுபாடான வர்த்தக நடைமுறைகளைப் பின்பற்றுவதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு 50 சதவீத தீர்வை (Tariff) வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த புதிய தீர்வை வரிகள் இன்னும் 30 நாட்களில் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, இந்த வரி விதிப்பு அமெரிக்கா–கனடா வர்த்தக உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
What's Your Reaction?



