நேபாளத்தில் பேரழிவு வெள்ளம்: 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் நேபாள பாதுகாப்புப் படை முகாமில் தஞ்சமடைவு

SaiSai
Aug 26, 2026 - 18:51
 0  59
நேபாளத்தில் பேரழிவு வெள்ளம்: 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் நேபாள பாதுகாப்புப் படை முகாமில் தஞ்சமடைவு
நேபாளத்தில் பேரழிவு வெள்ளம்: 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் நேபாள பாதுகாப்புப் படை முகாமில் தஞ்சமடைவு

நேபாளத்தில் பேரழிவு வெள்ளம்: 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் நேபாள பாதுகாப்புப் படை முகாமில் தஞ்சமடைவு

கொழும்பு / காட்மாண்டு:

நேபாளத்தின் வடக்கு எல்லையோரப் பகுதியில் அமைந்துள்ள போதே கோஷி (Bhote Koshi) ஆற்றில் திடீரென ஏற்பட்ட பேரழிவு வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

திபெத் பகுதியில் ஏற்பட்ட பனி ஏரி உடைப்பு காரணமாகவே இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. மேலும் பலர் காணாமல்போயுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தின் வேகத்தில் பாலங்கள், வீதிகள் மற்றும் கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

தமிழர்கள் பாதுகாப்புசுற்றுலாவுக்காக நேபாளம் சென்ற 50-க்கும் மேற்பட்ட தமிழர்கள் வெள்ள நிலைமை காரணமாக வீதிகளைப் பயன்படுத்த முடியாமல் போதே கோஷி பகுதியில் சிக்கிக்கொண்டனர். இவர்கள் அனைவரும் தற்போது 'திமுரே' (Timure) பகுதியில் அமைந்துள்ள நேபாள ஆயுதப் படை முகாமில் பாதுகாப்பாகத் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மீட்புப் பணிகள்:

நேபாள இராணுவம் மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் உலங்குவானூர்திகள் (Helicopters) மூலம் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கியுள்ளவர்களைப் பாதுகாப்பாக மீட்கத் தேவையான தூதரக மட்டத்திலான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow