தண்ணீர் என நினைத்து ரசாயன திரவத்தை குடித்த 3 வயது சிறுமி உயிரிழப்பு

SaiSai
Aug 25, 2026 - 05:28
 0  56
தண்ணீர் என நினைத்து ரசாயன திரவத்தை குடித்த 3 வயது சிறுமி உயிரிழப்பு

தண்ணீர் என நினைத்து ரசாயன திரவத்தை குடித்த 3 வயது சிறுமி உயிரிழப்பு

கம்பளை, புப்புரஸ்ஸ – டெல்டாவத்த பகுதியில் உள்ள வீடொன்றில், தண்ணீர் என நினைத்து ரசாயன திரவத்தை அருந்திய மூன்று வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவிலிருந்து பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் குறித்த வீட்டிற்கு வந்திருந்த சிறுமியே இந்த துயர சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

குடும்பத்தினர் அனைவரும் நேற்று மதியம் மற்றும் மாலை வேளைகளில் வீட்டிற்கு வெளியே சென்றிருந்த சந்தர்ப்பத்தில், சிறுமி வீட்டிற்குள் சென்று ஜன்னலில் வைக்கப்பட்டிருந்த திரவமொன்றை தண்ணீர் என தவறாக நினைத்து குடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பளை வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேதப் பரிசோதனையின் போது, பசுவின் பாலைப் பதப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ரசாயன திரவத்தை அருந்தியதன் காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow