மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

SaiSai
Oct 3, 2026 - 19:53
 0  49
மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பாமஸ்ரன் தோட்டத்தில் இன்று(03) பிற்பகல் இடி மின்னல் தாக்கி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலை பாமஸ்ரன் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய சுப்பிரமணியம் தேவ குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் இன்று பிற்பகல் தலவாக்கலை பாமஸ்ரன் தோட்டப் பகுதிகளில் பலத்த இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதன் போது நான்கு பேர் இணைந்து வீடு ஒன்றில் இருந்த போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக் கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தலவாக்கலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow