ஒக்டோபர் 1 முதல் முதியோர் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வைப்பு.!

SaiSai
Sep 29, 2026 - 12:44
 0  56
ஒக்டோபர் 1 முதல் முதியோர் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வைப்பு.!

ஒக்டோபர் 1 முதல் முதியோர் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வைப்பு..!

2026 செப்டெம்பர் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு, எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் சம்பந்தப்பட்ட பயனாளிகளின் ‘அஸ்வெசும’ வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 616,755 முதியோர்களுக்காக 3,083.755 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 79,063 முதியோர்களுக்காக 395.315 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இரு கட்டங்களின் கீழும் 695,818 முதியோர்களுக்காக மொத்தம் 3,479.07 மில்லியன் ரூபாய் செலுத்தப்படவுள்ளது.

சம்பந்தப்பட்ட பயனாளிகள் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow