மட்டக்களப்பில் சோகம் கல்லடிப் பாலத்தில் இருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்

SaiSai
Jan 24, 2026 - 09:28
Jan 24, 2026 - 09:29
 0  24
மட்டக்களப்பில் சோகம் கல்லடிப் பாலத்தில் இருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்

மட்டக்களப்பில் சோகம்

கல்லடிப் பாலத்தில் இருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்திற்கு அருகே யுவதி ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று இரவு (23) கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, குறித்த யுவதி நீரில் மூழ்கிய நிலையில் பிரதேச இளைஞர்கள் மற்றும் பொலிசாரினால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் தாழங்குடா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என்பதும், கடந்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதியவர் என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow