கிணற்றில் தவறி விழுந்த யுவதி பலி! யாழ்ப்பாணத்தில் சோகம்.துயர சம்பவம்
கிணற்றில் விழுந்து யுவதி உயிரிழப்பு_*..!
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (03) கிணற்றில் தவறி விழுந்த யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த 19 வயது யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த யுவதி இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கடந்த மூன்று மாதங்களாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்றையதினம் கிணற்றினுள் தவறி விழுந்துள்ளார்.
பின்னர் அவரை மீட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
What's Your Reaction?



