சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து உடனான தோல்வி குறித்து சங்கவின் கருத்து !

SaiSai
Feb 23, 2026 - 10:03
 0  17
சூப்பர்   8 சுற்றில் இங்கிலாந்து உடனான தோல்வி குறித்து சங்கவின் கருத்து !

 T20 உலகக் கிண்ணத்தின் சுப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் இலங்கை அணி சந்தித்த தோல்வி குறித்து, முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

தமது உத்தியோகபூர்வ x தளத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பந்துவீச்சாளர்களின் திட்டமிடலுக்கும், துடுப்பாட்ட வீரர்களின் செயல்பாட்டுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடு இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்திய போதிலும், துடுப்பாட்ட வீரர்கள் அதற்கு நேர்மாறாகச் செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், போட்டியின் சூழலையும் பல்லேகல ஆடுகளத்தின் தன்மையையும் சரியாகப் புரிந்துகொண்டு விளையாடத் தவறியதே தோல்விக்கு முக்கிய காரணம் என அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow