விபத்துகளில் 120 பேர் வரை பலி -பொலிசார் தெரிவிப்பு!
120 பேர் உயிரிழந்ததுடன், 216 பேர் கடுமையாக காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி வரை பதிவான விபத்துகளில் 120 பேர் உயிரிழந்ததுடன், 216 பேர் கடுமையாக காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை ஊடகப் பிரிவு இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி மாதம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 113 விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக வேகத்தில் ஓட்டுதல், மதுபோதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுதல் ஆகியவை விபத்துகளுக்கான முக்கிய காரணங்களாக உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து பாதுகாப்புடன் பயணம் செய்யுமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
What's Your Reaction?



