மஸ்கெலியாவில் குளவி கொட்டு ஐவர் வைத்தியசாலையில்!
ஜந்து ஆண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில்.
இச் சம்பவம் இன்று மதியம் 1 மணிக்கு இடம் பெற்று உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் மஸ்கெலியா புரவுன்லோ தோட்ட புரவுன்லோ பிரிவில் பணி புரிந்து கொண்டு இருந்த வேளையில் அதிக உஷ்ணம் காரணமாக குளவி கூடு களைந்து கொட்டியதில் ஆண் தொழிலாளர்கள் ஜவர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் எம்.சிசி குமார் வயது 31 வீ.நந்தராஜ் வயது 36 ஜி.முருகையா வயது 56 ஆர்.ரவி வயது 50 ஏ.கோகிலன் வயது 55 ஆகியவர்கள் இவர்கள் தோட்ட நிர்வாகி தோட்ட வைத்தியர் மூலம் உடன் முச்சக்கர வண்டியில் வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டனர்.
மஸ்கெலியா நிருபர்.
What's Your Reaction?



