மாணவனின் தவறான முடிவு!

SaiSai
Jun 2, 2026 - 09:09
 0  15
மாணவனின் தவறான முடிவு!

தவறான முடிவு எடுத்த மாணவன்.

நேற்று 1 ம் திகதி மாலை 3.30 மணியளவில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட புரவுன்சீக் பிரிவில் உள்ள 19 வயது உடைய பாடசாலை மாணவன் ஒருவன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள மாமரத்தில் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மஸ்கெலியா பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மா மரத்தில் தொங்கும் உடலை பார்வை இட்ட பின்னர் ஹட்டன் தடயவியல் பொலிசாருக்கு அறிவித்தனர்.

நேற்று இரவு வந்த தடயவியல் பொலிசார் அங்கு சென்று தடயங்கள் சேகரித்த பின்னர் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டது.

இன்று 2 ம் திகதி கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற் கூற்று பரிசோதனை செய்த பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க பட உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

மஸ்கெலியா நிருபர்.செ.தி பெருமாள்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow