பேரிடரிலும் கைகொடுத்து வரும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம்

SaiSai
Dec 15, 2025 - 18:26
Dec 15, 2025 - 18:41
 0  73
பேரிடரிலும்  கைகொடுத்து வரும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம்
பேரிடரிலும்  கைகொடுத்து வரும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம்
பேரிடரிலும்  கைகொடுத்து வரும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம்
பேரிடரிலும்  கைகொடுத்து வரும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம்
பேரிடரிலும்  கைகொடுத்து வரும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம்

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் பேரிடர் நிவாரணப் பணிகள் தொடர்ச்சி

கடந்த மாதம் இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக் கரம் நீட்டி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, நேற்றைய தினமும் பேரிடர் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் இரண்டு குழுக்களாகப் பிரிந்து, இலங்கையின் இரண்டு பிரதேசங்களில் நிவாரண உதவிகளை வழங்கியது.

இதன் ஒரு பகுதியாக, கண்டி மாவட்டத்தில் உள்ள மில்கட கெந்தகட்ட, அலகொல, வட்டகல, கெலபொக்க மற்றும் நெல்லி மலை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 870 குடும்பங்களுக்கு தேவையான நிவாரணப் பொதிகள், மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிவாரணப் பணிகள் எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow