ஏறாவூரில் 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம்: 15 வயது அண்ணன் கைது
ஏறாவூர் 5ஆம் குறிச்சி பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகளில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதற்கட்ட விசாரணைகளின் படி, கைப்பேசி பயன்படுத்துவது தொடர்பாக 15 வயதுடைய அண்ணனுக்கும் 11 வயதுடைய தங்கைக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியுள்ளது. சம்பவம் நடைபெற்ற போது வீட்டில் பெற்றோர் இல்லாதிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, அண்ணன் தனது தங்கையின் கழுத்தை நெரித்ததாகவும், அதன் காரணமாக சிறுமி மயக்கமடைந்து பின்னர் உயிரிழந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தை மறைக்கும் நோக்கில், உயிரிழந்த சிறுமியின் உடலை குளியலறைக்குள் கொண்டு சென்று, நீர் நிரப்பப்பட்ட வாளிக்குள் தலையை வைத்துப் நீரில் மூழ்கி உயிரிழந்தது போன்று காட்ட முயற்சித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும், உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் தீவிர விசாரணைகளின் மூலம் உண்மை வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, 15 வயதுடைய அண்ணன் சந்தேகநபராக கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
What's Your Reaction?



