இலங்கையின் இசை உலகின் மூத்த பாடகி நந்தா மாலினி காலமானார்

SaiSai
Aug 21, 2026 - 03:12
 0  41
இலங்கையின் இசை உலகின் மூத்த பாடகி நந்தா மாலினி காலமானார்

இலங்கையின் இசை உலகின் மூத்த பாடகி நந்தா மாலினி காலமானார்

இலங்கையின் பிரபல மூத்த பாடகியும், இசைக் கலைஞருமான விஷாரத டாக்டர் நந்தா மாலினி தனது 82ஆவது வயதில் காலமானார்.

நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (20) அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை இசைத்துறையில் தனக்கென தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்த நந்தா மாலினி, பல தலைமுறைகளின் இதயங்களை தனது குரலாலும் இசையாலும் வென்றவர்.

அவரது மறைவை முன்னிட்டு ஆகஸ்ட் 21 முதல் 23ஆம் திகதி வரை மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow