நாட்டின் பிரதமர் பதவியிலோ அல்லது கல்வி அமைச்சர் பதவியிலோ இந்த மாற்றமும் இடம்பெற போவதில்லை! JVP செயலாளர் ரில்வின் செல்வா

SaiSai
Jan 12, 2026 - 15:31
 0  14
நாட்டின் பிரதமர் பதவியிலோ அல்லது கல்வி அமைச்சர் பதவியிலோ இந்த மாற்றமும் இடம்பெற போவதில்லை! JVP செயலாளர் ரில்வின் செல்வா

NPP அரசாங்கத்திற்குள் பிரதமர் பதவியில் மாற்றம் மேற்கொள்ளப்பட மாட்டாது. கல்வி அமைச்சராகவும், பிரதமராகவும் ஹரிணி அமரசூரிய எவ்வித தவறும் செய்யவில்லை. எனவே, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சின் பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பிரசாரம் அடிப்படையற்றது என JVP யின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். 

தற்போது சர்ச்சைக்குரிய விடயமாக இருக்கும் கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பான விடயங்கள் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்படும், இதன்போது, தவறு எங்கே நடந்தது என்பது கண்டறியப்படும்.

பிரதமரை பதவியில் இருந்து நீக்குவதற்கு எதிர்க்கட்சிகள் கனவு காண்கின்றன. ஹரிணி அமரசூரிய எதிர்க்கட்சிகளுக்கு சவாலாக இருப்பதால் அவரை குறிவைத்து எதிர்க்கட்சிகள் காய் நகர்த்துகின்றனர். பிரதமர் பதவியில் இருந்து ஹரிணி விலகுவதற்கு தயாராகி வருவதாக பரவி வரும் வதந்திகள் முற்றிலும் பொய்யானது என்றும் டில்வின் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow