முச்சக்கர வண்டிகள் மீது முறிந்து வீழ்ந்த பாரிய மரம்

SaiSai
Jan 12, 2026 - 16:26
 0  18
முச்சக்கர வண்டிகள் மீது முறிந்து வீழ்ந்த பாரிய மரம்

நமது உயிர் மீதும் உடமைகள் மீதும் நாம்தான் கவனமாகவும் பொறுப்பாகவும் இருக்க வேண்டும் மற்றவர்களால் ஒரு போதும் இருந்து விட முடியாது , நம்மை நாம் கவனிக்காத போது எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது , குறிப்பாக முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தமது வாழ்வாதாரத்துக்காக பணம் உழைப்பதற்கு பயணிகள் வருககைக்கா காத்திருப்பார்கள் , அந்த நேரத்தில் தங்களது வாகனங்களை நிழலுக்காக பெரிய மரத்திற்கு கீழ் நிறுத்தி வைத்திருப்பார்கள் இதன்போது மரம் முறிந்து வீழ்ந்து முச்சக்கர வண்டிகள் சேதமுற்றும் , மரணங்களும் ஏற்பட்டிருக்கின்றன,

 இப்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற சீரற்ற காலநிலை, மழை , பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுவது , மின்னல் தாக்கம் என பல ஆபத்தான சம்பங்கள் நிகழக்கூடும் , வாகங்களை நிறுத்தி வைப்போர் இந்தக் காலப்பகுதியில் பெரிய மரங்களுக்கு கீழ் நிறுத்தி வைப்பதை தவிர்த்து கொள்வதே சிறந்தது, உங்கள் வாகனங்களை குறிப்பாக முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் வேறொரு மாற்று ஏற்பாடை செய்ய வேண்டும்.. அதுவே உங்களுக்கு பாதுகாப்பானது...

கீழே உள்ள இந்த சம்பவமானது கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் நேற்று (11.01.2026 ) இடம்பெற்றுள்ளது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மீது பாரிய இத்தி மரம் முறிந்து விழுந்து பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

பிரதி Rj அஸ்கர்

#SriLankaTamilNews #SriLankaNews #awarnessvideo #socialmedia #BreakingNews #breakingnewssrilanka #todaynews

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow