பொருளாதாரக் கடன் 33 ட்ரில்லியன் வரை உயர்வு – ரவி கருணாநாயக்க குற்றச்சாட்டு

SaiSai
மே 18, 2026 - 12:30
 0  7
பொருளாதாரக் கடன் 33 ட்ரில்லியன் வரை உயர்வு – ரவி கருணாநாயக்க குற்றச்சாட்டு

பொருளாதாரக் கடன் 33 ட்ரில்லியன் வரை உயர்வு – ரவி கருணாநாயக்க குற்றச்சாட்டு

2024 செப்டம்பர் மாதத்தில் சுமார் 28.3 ட்ரில்லியன் ரூபாவாக இருந்த நாட்டின் மொத்தக் கடன் தற்போது 33.2 ட்ரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் குறுகிய 16 மாத காலத்துக்குள் சுமார் 5 ட்ரில்லியன் ரூபா கடன் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, அமெரிக்க டொலர் மதிப்பு 290 ரூபாவிலிருந்து 331 ரூபாவாக உயர்ந்திருப்பதும் பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு பணவனுப்பல் (remittances) முறையில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் தெளிவான கட்டுப்பாட்டு அமைப்பு இல்லாமை தற்போதைய நெருக்கடியின் முக்கிய காரணமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் கருத்து தெரிவித்த அவர், இறக்குமதியாளர்கள் தங்களது சொந்த வெளிநாட்டு நாணயத்தை பயன்படுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதித்தால் சந்தை சிதைவுகள் குறையும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தற்போதைய வட்டி வீதக் கொள்கைகள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் பொருளாதாரத்தை மேலும் பாதிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow