6ஆம் தரத்துக்கான புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2027க்கு ஒத்திவைப்பு
6ஆம் தரத்துக்கான புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2027க்கு ஒத்திவைப்பு
6ஆம் தரத்திற்கான புதிய கல்வி சீர்திருத்தங்களை 2027ஆம் ஆண்டிலிருந்து அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று (13) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், 1ஆம் தரத்துக்கான கல்வி சீர்திருத்தங்கள் 2026ஆம் ஆண்டிலிருந்து வழமைபோல் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தயாரிப்புகள் மற்றும் தொடர்புடைய அம்சங்களை கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கம் அளித்தார்.
What's Your Reaction?



