கிழக்கு மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று பணிநிறுத்தப் போராட்டம்

SaiSai
Jan 13, 2026 - 14:42
 0  13
கிழக்கு மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று பணிநிறுத்தப் போராட்டம்

கிழக்கு மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (13) அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் பணிநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை உடனடியாக பதவியிலிருந்து நீக்கி, அதற்குப் பதிலாக வேறொரு பணிப்பாளரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள 02 பொது வைத்தியசாலைகள், 01 போதனா வைத்தியசாலை, 17 ஆதார வைத்தியசாலைகள், 52 பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் 113 ஆரம்ப சுகாதார மையங்களில் பணிநிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வைத்தியர்களும் இப் பணிநிறுத்தப் போராட்டத்தில் இணைந்துள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow