இந்த அதிர்ச்சியிலிருந்து நாடு மீண்டு, முன்பைவிட சிறந்த நாட்டை கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி
சுழல் புயல் ‘டிட்வா’ காரணமாக நாட்டுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இலங்கை மீண்டு, முன்பைவிட சிறந்த ஒரு நாட்டை உருவாக்குவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
‘Rebuilding Sri Lanka’ (இலங்கையை மீளக் கட்டியெழுப்புதல்) என்ற தேசிய திட்டத்தின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய அவர், மாற்றமும் முன்னேற்றமும் இயல்பாக நிகழ்வதில்லை என்றும், அதற்காக திட்டமிட்ட முயற்சிகளும் உறுதியான தீர்மானங்களும் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தை நோக்கிய நிலையான வளர்ச்சி, மக்களின் பங்களிப்பு மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய செயற்பாடுகளின் மூலமே நாடு மீண்டும் எழுந்து நிற்கும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
What's Your Reaction?



