எந்த தந்தைக்கும் இந்த நிலை வரக்கூடாது
அளுபோமுல்லவில் மனதை உருக்கும் சம்பவம்.
தந்தையின் அரவணைப்பில் பாதுகாப்பாக இருந்த ஒரு பச்சிளம் குழந்தை, ஒரு கண நேரத் தவறுதலால் உயிரிழந்த சம்பவம்,
இலங்கையின் களுத்துறை மாவட்டத்தின் அளுபோமுல்ல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
படதொப துடுவ பகுதியைச் சேர்ந்த ருசேலி கெயாஷா என்ற இரண்டரை மாத பெண் குழந்தை,
தந்தைக்கு தெரியாமலே ஏற்பட்ட தூக்கம் காரணமாக அவரது கைகளிலிருந்து நழுவி கீழே விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கீழே விழுந்தபோது, குழந்தையின் தலை சீமெந்து தரையில் மோதியதால் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குழந்தை கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,
மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவு மற்றும் இரத்தம் உறைந்தமை காரணமாக உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில், குழந்தையின் தந்தை அளுபோமுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது, எனக்குத் தெரியாமலே தூக்கம் வந்தது.
மகளின் அழுகைச் சத்தம் கேட்டதும் திடுக்கிட்டு விழித்தேன், என தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட தந்தை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன்,
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?



