வட்டவளையில் மதன மோதக விற்பனை நிலையம் முற்றுகை!
பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த ‘மதன மோதக’ விற்பனை – வட்டவளை பகுதியில் முற்றுகை, ஒருவர் கைது
வட்டவளை பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த ‘மதன மோதக’ விற்பனை செய்த கடை ஒன்றை ஹட்டன் கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (19) முற்றுகையிட்டனர்.
முற்றுகையின் போது மதன மோதக உருண்டைகளுடன் அங்கு பணிபுரிந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடை உரிமையாளர் அச்சமயம் அங்கு இல்லை.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் அறிவுறுத்தலின் கீழ், பொலிஸ் அத்தியட்சகர் நிஷாங்க கொடமுல்லவின் வழிகாட்டலில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (20) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
What's Your Reaction?



