யாழ் மருத்துவ பீடத்தையே கதிகலங்க செய்த யுவதி!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் அனுமதி பெறாத ஒரு யுவதி, கடந்த இரண்டு மாதங்களாக விரிவுரைகளில் கலந்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பாக தெரியவருவது, கடந்த நவம்பர் மாதம் புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டதில், கண்டியை சேர்ந்த அந்த யுவதி பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்து விரிவுரைகளுக்கு சென்றதாகும்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கற்கை செயற்பாட்டில், 202 மாணவர்கள் காணப்பட வேண்டிய நிலையில் 203 மாணவர்கள் காணப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பரிசீலித்தபோது அனுமதி இல்லாத யுவதி விரிவுரைகளில் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.
மருத்துவ பீடத்தினர் தெரிவித்ததாவது, மாணவிகள் மத்தியில் உயிரியல் பாடத்தில் 3 சாதாரண (S) சித்திகள் பெற்ற கண்டியை சேர்ந்த அந்த யுவதி, மாணவர் விடுதியில் தங்கி விரிவுரைகளில் கலந்ததாகும்.
இது தொடர்பான தகவல்கள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டு, அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
What's Your Reaction?



