அரச வாகனங்களுக்கு எரிபொருள் பெற டிஜிட்டல் அட்டை – அமைச்சரவை ஒப்புதல்

SaiSai
Jan 14, 2026 - 01:02
 0  25
அரச வாகனங்களுக்கு எரிபொருள் பெற டிஜிட்டல் அட்டை – அமைச்சரவை ஒப்புதல்

அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை அதிக வெளிப்படைத்தன்மையுடனும் வினைத்திறனுடனும் மேற்கொள்ள டிஜிட்டல் அட்டை முறை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலம் இணையவழி வங்கி முறையில் பண ஈடுசெய்தல் சாத்தியமாகி, தனிநபர் தலையீடுகள் குறையும்.

முதற்கட்டமாக ஜனாதிபதி செயலக வாகனத் தொகுதிக்கு முன்னோடித் திட்டமாக அமுல்படுத்தப்பட்டு, அதன் வெற்றியின் அடிப்படையில் ஏனைய அரச நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. தற்போது இந்த முறையை இலங்கை வங்கியும், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow