எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

SaiSai
Jan 5, 2026 - 22:48
Jan 5, 2026 - 22:48
 0  85
எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சில எரிபொருள் வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதுடன், சிலவற்றின் விலைகளில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்டேன் 95 பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 5 அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ. 340 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ டீசல் லிட்டருக்கு ரூ. 2 அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ. 279 ஆகும்.

சூப்பர் டீசல் லிட்டருக்கு ரூ. 5 அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ. 323 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 2 அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ. 182 ஆகும்.

ஆக்டேன் 92 பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow