லிந்துலை வைத்தியசாலையில் நடக்கும் கவலைக்குரிய விடயம்
கடந்த பல மாதங்களாக லிந்துல்ல மாவட்ட வைத்திய சாலையில் நோயாளிகள் தங்கியிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவது இடை நிறுத்தம் செய்ய பட்டு உள்ளது அதற்கான மாற்று நடவடிக்கை இன்று வரை இல்லை என்று அப் பகுதியில் உள்ள மக்கள் ஆதங்கம்.
பல மாதங்களுக்கு முன்பு லிந்துல்ல மாவட்ட வைத்திய சாலையின் மேற் பகுதியில் இருந்து பாரிய கற்கள் வந்த காரணத்தாலும் வைத்திய சாலைக்கு அருகில் கங்கை ஒன்று செல்வதால் வைத்திய சாலை பகுதியில் பூமி தாழ் இரக்கம் ஏற்பட்டதின் காரணமாக வைத்திய சாலையில் உள்ள ஆண்கள் தங்கி சிகிச்சை பெறுதல் பெண்கள் தங்கி சிகிச்சை பெறுதல் சிறுவர்கள் தங்கி சிகிச்சை பெறுதல் மகப்பேறு க்கு தங்கி இருந்த பேறுகளை பெறுதல் இடை நிறுத்தம் செய்ய பட்டு நுவரெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு மாற்றம் செய்ய பட்டு வருகிறது.
குறிப்பாக இந்த வைத்திய சாலை பல தசாப்தங்களுக்கு முன் வெள்ளையர்களால் கட்டப்பட்டது.
இவ் வைத்திய சாலையில் ஏனைய வைத்திய நிகழ்வுகள் செவ்வனே இடம் பெற்று வந்த போதிலும் தங்கி இருந்த சிகிச்சை பெற்று கொள்ள முடியாது உள்ளது.
இப் பகுதியில் உள்ள பெருந்தோட்ட மக்கள் மற்றும் நகர கிராம மக்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுகாதார அமைச்சர் முன் வந்து நவீன முறையில் நிரந்தர வைத்திய சாலை ஒன்றை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர்
What's Your Reaction?



