வெனிசுலா ஜனாதிபதியின் நிலை அனுர குமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படலாம் -நாமல்mp
வெனிசுலா ஜனாதிபதிக்கு நடந்தது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் நடக்கலாம். அரச அச்சகத்தில் அச்சாகும் புத்தகத்தில் இருக்கும் தவறை அறிய முடியாத அரசாங்கம். இவர்கள் எப்படி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பார்கள்.
அரசாங்கத்திலுள்ளவர்கள் மதம் மற்றும் சம்பிரதாயங்கள் இல்லாமல் ஏதோ ஒரு வழியில் செல்பவர்களாக இருக்கிறார்கள். வெளிநாடுகளின் தேவைக் கேற்ப அரசாங்கம் கொள்கைகளை தயாரிப்பதென்றால் வெனிசுலாவுக்கு நடந்தது தான் எமது நாட்டுக்கும் நடக்கும்.
பிரதமர் கூட பெரும் சங்கடத்துக்கு உள்ளாகியுள்ளார். பிரதமர் பதவியை ஹரிணிக்கு வழங்கியது இவ்வாறான திட்டங்களை முன்னெடுத்து செல்வதற்காகவா என்ற சந்தேகம் எழுகிறது. NPP அரசாகத்தில் உள்ள 159 பேருக்கு மட்டும் வேறான ஒரு சட்டம் செயற்படுத்தப்படுகிறது
நாமல் ராஜபக்ச Mp
What's Your Reaction?



