இடி மின்னல் தாக்கி முதியவர் உயிரிழப்பு – நோர்வூட் பகுதியில் துயர சம்பவம்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொக்வூட் தோட்டப் பகுதியில் நேற்று (20) மாலை இடம்பெற்ற இடி மின்னல் தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை சுமார் 7.00 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இடி மின்னல் தாக்கியதில் 86 வயதுடைய கந்தன் ஆண்டி என்பவர் கடுமையாக காயமடைந்தார்.
அவரை அவசரமாக 1990 நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) மூலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வைத்தியர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மதியம் 2.00 மணி முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
– மஸ்கெலியா நிருபர் செ.தி. பெருமாள்
What's Your Reaction?



