புதன்கிழமை விடுமுறை ரத்து
புதன்கிழமை விடுமுறை ரத்து – ஏப்ரல் 8 முதல் வழமையான சேவைகள்
இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், புதன்கிழமைகளில் வழங்கப்பட்டிருந்த அரச விடுமுறையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஏப்ரல் 8ஆம் திகதி புதன்கிழமை முதல் பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பான உத்தியோகபூர்வ சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிய எரிபொருள் நெருக்கடியை முன்னிட்டு, எரிபொருள் சேமிப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 17ஆம் திகதி முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த விடுமுறை அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித்துறை உள்ளிட்ட துறைகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, அந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், இனி அனைத்து சேவைகளும் வழமையான முறையில் நடைபெறும்.
What's Your Reaction?



