கொழும்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த மலையக பிரதிநிதிகள்!

SaiSai
Dec 23, 2025 - 19:44
 0  26
கொழும்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த மலையக பிரதிநிதிகள்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் Dr S. Jaishankar அவர்களை, இன்று (23) கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் சந்தித்து மலையக பிரதிநிதிகள் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.

இந்தச் சந்திப்பின் போது, இந்திய வம்சாவளி தமிழ் (IOT) சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள், டிட்வா சூறாவளியின் பின்னரான அனர்த்த நிலைமைகள் மற்றும் குறிப்பாக மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட முக்கிய சமூக சார்ந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இக்கட்டான காலகட்டத்தில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய தொடர்ச்சியான ஆதரவுக்காக என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ள அதேவேளை . குறிப்பாக, 450 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அடங்கிய உதவிகளுக்கும், அதனைச் செயல்படுத்திய இந்திய உயர்ஸ்தானிகர் மேன்மைதாங்கிய சந்தோஷ் ஜா அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் எனது நன்றிகளை தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow