சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

SaiSai
Jun 7, 2026 - 21:19
Jun 7, 2026 - 21:21
 0  23
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

பயங்கரவாதத் தடை சட்டத்தின் (PTA) கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) சுரேஷ் சலே கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் முறையற்ற நடத்தைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (6) இரவு முதல் அவர் சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்திருந்த நிலையிலேயே, இன்று அவர் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுரேஷ் சலேயின் உடல்நிலை கடுமையான நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக அவரது சட்டத்தரணிகள் மற்றும் குடும்பத்தினர் தொடர்ச்சியாக எச்சரித்து வந்த நிலையிலும், அவர் உணவு, நீர் மற்றும் மருந்துகளை உட்கொள்ள மறுத்து வந்த நிலையிலுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow