மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; கத்தார் விமானப் பாதைகளில் 7 நாட்கள் தற்காலிக மாற்றம்
மீண்டும் அதிகரிக்கும் மத்திய கிழக்கு பதற்றம்: கத்தார் விமானப் பாதைகளில் தற்காலிக மாற்றம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு மற்றும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், கத்தார் தனது வான்வெளியில் இயங்கும் விமானங்களுக்கான தற்காலிக மாற்று விமானப் பாதைகளை அறிவித்துள்ளது.
இதற்கமைய, ஜூன் 7 முதல் ஜூன் 14 வரை அமலில் இருக்கும் வகையில், தோஹா விமானத் தகவல் மண்டலத்திற்குள் (Doha Flight Information Region) மாற்று வழித்தடங்களை பயன்படுத்துமாறு விமானிகளுக்கான அறிவிப்பு (NOTAM) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய ஏற்பாட்டின் கீழ், தோஹா மற்றும் சவூதி அரேபியாவின் சில விமான நிலையங்களிலிருந்து புறப்படும் விமானங்களுக்கு மாற்று பாதைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் - இஸ்ரேல் இடையிலான அதிகரித்து வரும் பதற்ற நிலைமை மற்றும் பிராந்திய பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பயணிகள் தங்களது விமான சேவைகள் தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடமிருந்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
What's Your Reaction?



