சிறுவர் துஷ்பிரயோக வழக்கில் தொடர்புடைய பிக்குக்கு 24 வருட கடூழிய சிறை!

SaiSai
Jun 8, 2026 - 07:16
 0  26
சிறுவர் துஷ்பிரயோக வழக்கில் தொடர்புடைய பிக்குக்கு 24 வருட கடூழிய சிறை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட பிக்குக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வறுமை காரணமாக சிறந்த கல்வியை பெற கலென்பிந்துனுவெவ பிரதேச விகாரையொன்றில் ஒப்படைக்கப்பட்ட 10 வயது சிறுவனைத் கடும் பாலியல் துர்நடத்தைகளுக்கு உட்படுத்தியதாக அந்த விகாராதிபதி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

குறித்த வழக்கு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது குறித்த பிக்குவிற்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை விதித்து பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

 பிக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகாது தலைமறைவாகியிருந்த நிலையில் அவர் இல்லாத நிலையிலேயே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தற்போது அந்த பிக்குவைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow