மின்னல் தாக்கத்தின் காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம்!
மின்னல் தாக்கியதால் ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்!
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை நோக்கி புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் ஒன்று, மின்னல் தாக்கத்தால் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (12) அதிகாலை 01.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட UL-606 என்ற ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம், புறப்பட்டு சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு மின்னல் தாக்கத்துக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏர்பஸ் A-330 ரக விமானத்தில் 217 பயணிகளும் 16 பணியாளர்களும் இருந்தனர். அப்பகுதியில் நிலவிய கடும் மின்னல் காலநிலை காரணமாக, விமானி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 01.40 மணியளவில் பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார்.
பின்னர், பயணிகளின் தொடர்ந்த பயணத்திற்காக அதே ரகத்தைச் சேர்ந்த மற்றொரு A-330 விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, இன்று காலை 06.06 மணியளவில் சிட்னி நோக்கி மீண்டும் புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மின்னல் தாக்கத்துக்குள்ளான விமானம் பரிசோதனை மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக விமானப் பொறியியல் பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது
What's Your Reaction?



