ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சல்லே கைது !

SaiSai
Feb 25, 2026 - 12:32
 0  16
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சல்லே கைது !

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சல்லே கைது !

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு கட்டமாக, அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சல்லே கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை பேலியகொட பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ASP எஃப்.யு. வூட்லர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற போது, சுரேஷ் சல்லே பிரிகேடியர் தரத்தில் பணியாற்றியவர். அதனைத் தொடர்ந்து இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவும், பின்னர் அரச புலனாய்வுச் சேவையின் தலைவராகவும் பதவி வகித்தார். அவர் அண்மைக் காலம் வரை மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் ஆலோசகராகப் பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow